இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 57 நேரடி தமிழ் படங்கள் வெளியானது. முன்னணிநட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான ஒரே படம் பொன்னியின் செல்வன் – 2 மட்டுமே. 57 படங்களில் படைப்புரீதியாக,வணிக அடிப்படையில் 20 படங்கள் இடம்பெற்றன. வணிக அடிப்படையில் கல்லாகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன், வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி, சுந்தர் சி நடிப்பில் வெளியான தலைநகரம் – 2, முத்தைய்யா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான காதர்பாட்சா@முத்துராமலிங்கம் ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை. விஜய்ஆண்டனி நடிப்பில் நீண்ட காலமாக முடங்கிகிடந்த தமிழரசன் வெளியாகி வந்தவேகத்திலேயே திரையரங்குகளை விட்டு வெளியேற, அவர் இயக்கி, நடித்த பிச்சைகாரன் – 2 வெளியாகி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிபெற்றது. முதல் பாகத்தை காட்டிலும் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் – 2 வசூலில் சாதனை நிகழ்த்தவில்லை. நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெற்றிபெற தவறிய குழலில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குறைந்தபட்ஜெட்டில் தயாரான குட்நைட், போர் தொழில் ஆகிய
படங்கள்50 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்து ஆச்சர்யம் ஏற்படுத்தியது. இரண்டு படங்களும் அறிமுக இயக்குநர்கள் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது காலாண்டின் இறுதியில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் 70 கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் செய்தது என்பதுடன் நகைச்சுவை நடிகராக வடிவேலுவைபார்த்து ரசித்து பழக்கப்பட்ட தமிழ் சினிமா ரசிகனுக்கு அவருக்குள்ளிருந்த குணசித்ர நடிகனை திரையில் பார்த்து பரவசப்பட வைத்த படம் மாமன்னன். படத்தின் டிரைலர் பொன்னியின் செல்வன் – 2 படத்துக்கு போட்டி படமா என எல்லோரையும் பேச வைத்த யாத்திசை வரலாற்று படம் படைப்புரீதியாக பொன்னியின் செல்வன் படத்திற்கு குறைவானது இல்லை என்று படம் வெளியான பின்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இருந்தபோதிலும் நட்சத்திர நடிகர்கள், மக்களுக்கு அறிமுகமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவில்லை. எல்லோரும் புதுமுகம் என்பதுடன், படத்திற்கான விளம்பரங்கள் மிக பலவீனமாக இருந்ததால் படம் மக்களிடம் சென்றடையவில்லை. அதேவேளை நட்சத்திர அந்தஸ்து, பிரபலம், தேவையான விளம்பரங்கள் இருந்தும்கூட கிராமத்து வாழ்வியலை, காதலை பற்றி அழுத்தமாக பதிவு செய்த தண்டட்டி படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை. சொப்ன சுந்தரி, பர்ஹான என பெண்களை முதன்மைபடுத்திய திரைக்கதையுடன் வெளியான இவ்விரண்டு படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார் இரண்டு படங்களும் படைப்புரீதியாக பாராட்டப்பட்டாலும் வணிக அடிப்படையில் தயாரிப்பாளருக்கு முதலீட்டில் நஷ்டத்தை ஏற்படுத்திய படங்களானது. இரண்டாவது காலாண்டில் அறிமுக இயக்குநர்கள் இயக்கத்தில் வெளியானபட்ஜெட் படங்களான குட் நைட், போர் தொழில், மற்றும் விஜய்ஆண்டனி இயக்குநராக அறிமுகமான பிச்சைக்காரன் – 2 ஆகிய மூன்று படங்களும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் ஆதிக்கம் செலுத்தியது. கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியானஆகஸ் 16, 1947, அருள்நிதி நடிப்பில் வெளியான திருவின் குரல், கழுவேறி மூர்க்கன், ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது. இரண்டாவது காலாண்டில் படத்தயாரிப்புக்காகசுமார் 600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளியான 57 படங்களில் குட் நைட், பிச்சைக்காரன் – 2, போர் தொழில், மாமன்னன் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே தயாரிப்பு, விநியோகம், திரையரங்கு, ஆகியோருக்கு லாபத்தை கொடுத்த படங்களாகும்
2023ஏப்ரல்
52. ஆகஸ்ட் 16 1947
53. இது கதையல்ல நிஜம்
54. முந்திரிக்காடு
55. ரேசர்
56.தலைக்கவசம்
57. எவன்
58. யோசி
59. இரண்டில் ஒன்று பார்த்துவிடு
60.ராபரி
61.ருத்ரன்
62. சொப்ன சுந்தரி
63. திருவின் குரல்
64. தெய்வ மச்சான்
65. ஜம்பு மகரிஷி
66. மாவீரன் பிள்ளை
67. யானைமுகத்தான்
68. யாத்திசை
69.தமிழரசன்
70. பொன்னியின் செல்வன் – 2
71. துடிக்குது புஜம்
2023மே
72. எப்போதும் அவ நினைப்பு
73.குலசாமி
74.தீர்க்கதரிசி
75. ஊர் செய்தி
76. கஸ்டடி
77. பர்ஹானா
78.குட் நைட்
79. ராவண கோட்டம்
80. சிறுவன் சாமுவேல்
81. கருங்காப்பியம்
82. பிச்சைக்காரன் – 2 – ஹிட்
83. யாதும் ஊரே யாவரும் கேளீர்
84.1982 அன்பரசன் காதல்
85. கழுவேத்தி மூர்க்கன்
86. தீராக்காதல்
87. காசேதான் கடவுளடா
2023சூன்
88.காதர்பாட்சா@முத்துராமலிங் கம்
89. திருத்தம்
90.உன்னால் என்னால்
91. வீரன்
92. தொட்டாசிணுங்கி
93. பெல்
94. போர் தொழில்-சூப்பர் ஹிட்
95. தக்கார்
96.வேலு
97. பொம்மை
98. எறும்பு
99.அஸ்வின்ஸ்
100. அழகிய கண்ணே
101. நாயடி
102. பாயும் ஒளி நீ எனக்கு
103. ரெஜினா
104. தலைநகரம் – 2
105. தண்டட்டி
106. மாமன்னன்
107. கபடி புரோ
108 . கண்டதை படிக்காதே.