ஒரு இளையராஜா ஒரு பாரதிராஜா இளையராஜாவின் கலகலப்பான பேச்சு

இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் ‘காதல் செய்’ என்ற படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா 21.03.2022 அன்று காலை சென்னை வள்ளுவர்கோட்டம் சாலையில் உள்ள இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோ வளாகத்தில் நடைபெற்றது.விழாவில்  இளையராஜா பேசும்போது, “நிகழ்கால பாரதிராஜாக்களே.. நிகழ்கால பி.வாசுக்களே.. நிகழ்கால இளையராஜாக்களே.. அது எப்படிய்யா ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தர் வருவாருன்னு எதிர்பார்க்குறீங்க.. அப்படியெல்லாம் வரவே முடியாது.. ஒரேயொருத்தர்தான்.. ஒரேயொரு பி.வாசுதான்.. ஒரேயொரு பாரதிராஜாதான்.. ஒரேயொரு இளையராஜாதான்.”

எவ்வளவு செல்வத்தோடு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தெளிவான அறிவோடு இருக்கணும்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. இது எல்லாருக்கும் பொருந்தும். இந்தப் படத்தைக் கஷ்டப்பட்டு தயாரிச்சிருக்காங்கன்னு சொன்னாங்க. கஷ்டப்படாமல் எதையும் செய்ய முடியாதுதான். படத்தைத்தான் கஷ்டப்பட்டுத் தயாரிக்கணும். படத்தை கஷ்டப்பட்டு பார்க்கக் கூடாது. அப்படியொரு சூழலை உருவாக்கக் கூடாது.இந்தப் படத்துல காதல் செய்யச் சொல்லியிருக்காங்க. நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு காதலை செய்யச் வைச்சிருக்கேன். 16 வயதினிலேபடத்தோட பாடல் வெளியீட்டு விழால இத்தனை கேமிராக்கள் இல்லை. ரிப்போர்ட்டர்கள் இல்லை. ஆனால் இன்றைக்கு இத்தனை கேமிராக்களோடு நிறைய செய்தியாளர்கள் வந்திருக்கீங்க.. இங்கே வந்ததுக்கு அனைவருக்கும் நன்றிஇந்தப் படம் ஜெயிக்கணும்ன்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்என்றார்.