ஏ. ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக  துபாய் சென்றுள்ளார்.துபாயில் இப்போது நடைபெற்று வரும் உலக எக்ஸ்போ கண்காட்சியில் நேற்று(மார்ச் 25) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது
இந்த எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த உலக எக்ஸ்போ கண்காட்சியில் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்தியேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன அந்த அடிப்படையில்தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து சிறப்புகளையும் இந்த ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 துபாய் எக்ஸ்போவில் சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் தங்கியுள்ளார். அரசு முறை பயணமாக துபாய் வந்துள்ள  முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று ஏ.ஆர். ரஹ்மான் சந்தித்தார். மேலும், அங்குள்ள தனது ரிக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு வருகை தருமாறு  அழைப்பு விடுத்தார்.
ஏ.ஆர். ரஹ்மானின் அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு சென்றார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கும் ‘மூப்பில்லா தமிழே… தாயே’ என்ற ஆல்பம் பாடலை முதலமைச்சருக்குப் போட்டுக் காட்டினார்.
முதல்வர் ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் இருக்கும் படங்களும் வீடியோவும் இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.