வேகமெடுக்கும் விக்ரம் விளம்பர பணிகள்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 2018ல் வெளியான படம் விஸ்வரூபம்-2 அதன் பின் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட சபாஷ் நாயுடு படம் கைவிடப்பட்டது இந்தியன் – 2 படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் விபத்து ஏற்பட்டதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது கொரோனா பொது முடக்கம் அதன் பின் இயக்குநர்ஷங்கர் – லைகா நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலால் படப்பிடிப்பு முடிவடையாமல் உள்ளது இந்த நிலையில்மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம்  ‘விக்ரம்’. தயாராகியுள்ளது 2022ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த மூன்று வருடங்களாக கமல்ஹாசன் நடிப்பில் படங்கள் வெளிவராத நிலையில் சூன் மாதம் வெளியாக உள்ள விக்ரம் படத்தின் விளம்பரங்களை பிரம்மாண்டமாக செய்ய தொடங்கியுள்ளது ராஜ்கமல் நிறுவனம் கொரோனா பொது முடக்கத்திற்கு பின் ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் மாஸ்டர், டாக்டர் படங்கள் மட்டுமே வணிகரீதியான வெற்றி பெற்றிருக்கிறது அண்ணாத்தே, வலிமை, பீஸ்ட் ஆகிய படங்கள் முதல் சில நாட்கள் அதிக டிக்கட் கட்டணத்தில் வசூல் சாதனை நிகழ்த்தியதாக சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்கள் கூவினாலும் சம்பந்தபட்ட தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக வசூல் சாதனை என அறிவிக்க இயலவில்லை ஆனால் தெலுங்கு, கன்னட, இந்திப்படங்கள் அதிகாரபூர்வமாக தங்கள் படங்களின் சாதனைகளை அறிவித்து வருகின்றன இந்த நிலையில் இந்திய சினிமாவில் மூத்த நடிகராக இருக்கும் கமல்ஹாசன் நடித்து வெளிவரும் விக்ரம் படம் படைப்புரீதியாகவும், வணிக அடிப்படையிலும் வெற்றிகரமான திரைப்படமாக்கப்பட வேண்டிய நிர்பந்தம் கமல்ஹாசனுக்கு உள்ளது அதானாலேயே விக்ரம் படம் சம்பந்தபட்ட எல்லா விஷயங்களிலும் கமல்ஹாசன் நேரடியாக கவனம் செலுத்துகிறார் மின்சார ரயில் நடைமுறைக்கு வந்த காலத்தில் இருந்து அதில் விளம்பரம் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது அதனையே கமல்ஹாசன் திரைப்படத்திற்கு செய்கிறபோது பொதுவெளியில் கவனம் பெறுகிறது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்திற்கு விமானத்தின் வெளிப்புறம் விளம்பரம் செய்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அப்போது அது பரபரப்பான செய்தியானது இப்போது ரயில்பெட்டிகளின் வெளிப்புறத்தில் “விக்ரம்”
திரைப்படத்துக்கான விளம்பரங்களை ரயில் பெட்டிகளில் மிகப்பெரிய அளவில்

 விளம்பரம் இடம்பெற்றுள்ள காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன், ரயில் பயணம் தனக்குப் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் பிறை, தேவர் மகன், மகாநதி திரைப்படங்களின் ரயில் காட்சிகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.