இயக்குநர்ஷங்கருக்கு கால அவகாசம் வழங்கிய நடிகர் ராம்சரண்

தமிழ்த்திரையுலகில்தயாரிப்பாளர், நடிகர் என இரு தரப்படையும்தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துபடங்களை இயக்கியவர் இயக்குநர் ஷங்கர் படத்தின் கதை, பட்ஜெட், என்று எந்த கேள்வியும் தயாரிப்பாளர்கள் இவரிடம் கேட்க முடியாது தமிழ்சினிமாவின் பாரம்பர்யமான தயாரிப்பு நிறுவனம், தமிழ் திரையுலகின் அடையாளமான ஏவிஎம் நிறுவனம் இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் இனிமேல் படங்கள் தயாரிப்பது இல்லை என்கிற முடிவுக்கு வந்தது
ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை ஷங்கர் இயக்கிய போது அவரது கட்டுப்பாடு அற்ற சுதந்திரத்திற்கு கடிவாளம் போட்டது படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் என்னவேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும் அது தேவையா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும் என்று ஷங்கருக்கு கூறப்பட்டது அதன் பின் அவரால் தன் இஷ்டப்படி படங்களை இயக்க முடியாமல் போனது
லைகா நிறுவனம் தயாரித்த 2.0 படத்தை இயக்கினார் அதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் தற்போது இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்த பின் தான் ஷங்கர் வேறு படங்களில் பணியாற்ற வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குநிலுவையில் உள்ளது
இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கங்களில் தங்கள் நிலையை தெரிவித்து புகார் செய்துள்ளது லைகா நிறுவனம் தெலுங்கில் நடிகர் ராம்சரண் நடிக்கும்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகி அதற்கான பணிகளை ஷங்கர் தொடங்கி இருந்தார்
இதனிடையே ராம்சரண் தற்போது நடித்து வரும்RRR படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் உள்ளார் சூலை மாதத்திற்குள் அந்தப் படத்தின் பணிகள் முடிந்துவிடும் எனத் தெரிகிறதுஎனவே, ஷங்கர் இயக்கும்படத்தை ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க ராம்சரண் முடிவு செய்துள்ளாராம்.

ஆனால், ‘இந்தியன் 2’ வழக்கின் தீர்ப்பு தெரியாமல் ராம் சரண் படத்தை ஷங்கர் இயக்க போகவும் முடியாது. எனவே, தனது படம் குறித்து முடிவு செய்ய ஷங்கருக்கு ராம் சரண் ஒரு வார அவகாசம்கொடுத்துள்ளார் என்றும், அதற்குள் அவரது முடிவைத் தெரிவிக்குமாறும் கூறியுள்ளாராம். இல்லையெனில் வேறு இயக்குனரின் படத்தில் நடிக்க ராம் சரண் முடிவெடுக்க வேண்டி வரும் என்று இயக்குநர் ஷங்கருக்கு தகவல் கூறப்பட்டிருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது