நடிகர் விஜய் யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் ஊடகங்கள் அளவு சம பலம் கொண்டதாக பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் ஆகிய சமூக வலைதளங்கள் உள்ளன. நடிகர்கள், அரசியலாளர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் தங்களுக்கென அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை வைத்துக்கொண்டு, முக்கிய நிகழ்வுகள் பற்றி அதில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருந்தாலும் அவ்வப்போது திரைப்படங்கள் தொடர்பான அப்டேட்களை மட்டும் அதில் பதிவிடுகிறார். அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தினரின் பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க ஒரு தளம் இல்லாமல் இருந்து வந்ததசமீபத்தில் விஜய் பெயரிலான அரசியல் கட்சியை அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் துவங்கிய நிலையில், அது விஜய் ஆரம்பித்த அரசியல் கட்சிதான் என பரவியது. ஊடகத்தில் இந்தத் தகவலை பார்த்து தெரிந்துகொண்டதாகவும், தனக்கும் அக்கட்சிக்கும் சம்பந்தமில்லை எனவும் விஜய் அடுத்த சில மணி நேரத்தில் மறுத்தார். இதனால் தான் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள், நிகழ்வுகள் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிவு எடுத்திருக்கிறார் விஜய். இதற்காகத்தான் புதிய யூ டியூப் சேனல் உருவாக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். அதில், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூ-டியூபில் சேனல் தொடங்கப்படுகிறது. தளபதியின் முடிவுகள் அனைத்தும் இனி அதில்தான் வெளியிடப்படுகிறது. தளபதி மக்கள் இயக்கம் செய்யும் நற்பணிகளையும் வெளியிட திட்டம் என்றும் அறிவித்துள்ளார். |
Next Post