குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட நடிகை சமந்தா

காதலித்து, திருமணம் செய்த தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை பிரிந்துவிட்டார் நடிகை சமந்தா. இவர்கள் பிரிவுக்கு சமந்தா குழந்தை பெற விரும்பாததே முக்கிய காரணம் என செய்தி பரவியது. அதை சமந்தா மறுத்தும் இருந்தார். மேலும் எந்த ஒரு தம்பதியர் விவகாரத்து என்று அறிவித்தால் உடனே தவறுகள் அனைத்தும் பெண்கள் செய்ததாகவே இந்த சமூகம் பார்க்கிறது. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என சமந்தா கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர் நடித்து முடித்துள்ள சாகுந்தலம் படத்தை தயாரித்துள்ள நீலிமா குணா ஒரு பேட்டியில், ‛‛என் தந்தை குணசேகர் இந்த கதையை சமந்தாவிடம் கூறியபோது அவருக்கு கதை பிடித்து இருந்தது. ஆகஸ்ட்டிற்குள் படத்தை முடிக்கும்படியும், அதன்பின் அவர் குழந்தை பெற விரும்புவதாகவும் சொன்னார் என தெரிவித்துள்ளார்