அஜீத்குமார் கேட்ட ஆலோசனை

படங்களில் நடிப்பது தவிர்த்து கார் ரேஸில் கலந்துகொள்வது, துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பது, பைக்கில் நீண்டதூரம் பயணம் செய்வது நடிகர் அஜீத்குமார் பொழுதுபோக்கு கார் ரேஸில் பங்கேற்றபோது ஏற்பட்ட காயம் காரணமாக அதில் பங்கேற்பதை தொடரவில்லை அதன் பின்படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக் கொண்டு நீண்டதூரம் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள அஜீத்குமார்

வலிமை படப்பிடிப்புக்கு இடையே நேரம் கிடைத்தபோது பைக் ரைடிங் சென்றுள்ளார்பைக் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியை படமாக்க ரஷ்யா சென்றபோது அங்கும் கூட ரைடிங் சென்ற அஜீத்குமாருக்கு
பைக்கில் உலகம் சுற்றி வர வேண்டும் என்பதுஆசை.

இந்நிலையில் அவர் ஆசைப்படுவது போன்று தன் பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யாசர்லூ என்கிற பெண் டெல்லிக்கு வந்திருக்கிறார்.இது குறித்து அறிந்த அஜித்குமார் டெல்லிக்கு சென்று அவரை சந்தித்து பேசியிருக்கிறார். மாரல் தன் பைக்கில் 64 நாடுகளை கடந்திருக்கிறார்.
எதிர்காலத்தில் தன் பைக்கில் உலகத்தை சுற்றிவரும் திட்டத்தில் இருக்கும் அஜித் அந்த பெண்ணிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அஜித்தின் ஊடக தொடர்பாளர்  வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த  ரசிகர்கள் விரைவில் தன் உலக பயணத்தை அஜீத்குமார்துவங்க வேண்டும் என்று  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்