கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் தங்களது படத்துக்கான ரிலீஸ் தேதியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன..
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு ரிலீஸ் தேதியை தீர்மானிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்
ஆனால் சங்கராந்தி பண்டிகைக்கு ஏற்கனவே தெலுங்கின் முன்ணனி நடிகர்களானமகேஷ்பாபு, பவன் கல்யாண் படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்ட நிலையில், தற்போது ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் கோடைவிடுமுறையில் படத்தை வெளியிடும் முடிவுக்கு வந்துள்ளார்கள்
அதேசமயம் ஆர்ஆர்ஆர் படத்திலும் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அந்த படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிடும்போது அது இந்தியில் இரண்டு படங்களின் வசூலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்பதால் தற்போது அஜய் தேவ்கனும் தர்ம சங்கடத்தில் இருக்கிறாராம்.