அஜீத்குமார் பிறந்த நாள் பரிசுவலிமை முதல் பார்வை – போனி கபூர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தது. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இதற்காக ஏப்ரலில் வெளிநாடு செல்வார்கள் எனச் சொல்லப்படுகிறது.‘வலிமை’ படத்தில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.தற்போது, ‘வலிமை’படம் குறித்த தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக தயாரிப்பாளர் போனிகபூர் வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…மே 1 ஆம் தேதி அஜித் தனது 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினத்தில் ‘வலிமை’ படத்தின் முதல்பார்வை வெளியாகும் எனவும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்