அஜீத்குமார் – 61 படத்திற்கு ஆங்கிலத்தில்கதை தேடல்

0
393

வலிமை படத்துக்கு அடுத்து அஜீத்குமார் நடிக்கும் படத்தை எச்.வினோத் இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். வலிமை படத்தின் திரைக்கதை பற்றி கடுமையான விமர்சனங்கள் வெளியானது ஆக்க்ஷன் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் கொஞ்சமேனும் திரைக்கதை இருக்க வேண்டாமா அப்படிசொதப்பிய வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜீத்குமார் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்கிற கேள்விகள் இயக்குநர்கள் மத்தியில் விவாத பொருளாகி வருகிறது

அஜீத்குமார் அடுத்து நடிக்கும்
ஏகே 61 என கூறப்படும் படத்துக்காக எச்.வினோத் சொன்ன கதைகள் எதுவும் அஜீத்குமாருக்கு பிடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஅதனால் வேற்றுமொழியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற  படத்தின் உரிமையை வாங்கி தமிழில் எடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர் அந்த வகையில் ஹாலிவுட் நடிகர் அல்பசினோ அஜீத்குமாருக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும் அவருடைய படங்களை மிகவும் விரும்பிப்பார்ப்பார் என்பதால் அவர்நாயகனாக
நடித்து 1975 ஆம் ஆண்டு வெளியான டாக் டே ஆஃப்டர்நூன்
(Dog day Afternoon) படத்தின் ரீமேக் உரிமையை சட்டபூர்வமாக வாங்குவது என முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
வங்கிக்கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தைதமிழுக்கு ஏற்ப திரைக்கதையில்மாற்றங்களை செய்யலாம் இதனால் திரைக்கதைக்கான மெனக்கெடல் இருக்காது என்பதுடன் ஆங்கிலப்படதழுவல் என்கிறபோது ஆக்க்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்பதால் அஜீத்குமார் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது ஏனென்றால் அஜீத்குமார் நடித்த பில்லா-2 படம் நடிகர் அல்பசினோ நடிப்பில் வெளியான
ஸ்கேர்ஃபேஸ் படத்தின் அப்பட்டமான காப்பி என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here