ராஜேஷ் எம் உதவியாளர் இயக்கும் சீரன் திரைப்படம்

ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில்,  இயக்குநர்ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும்  கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில்  நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் ராஜேஷ் எம் பேசியதாவது…
இப்படத்தின் இயக்குநர் துரை என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அவருக்கு வாய்ப்பு தந்த ஜேம்ஸ் கார்த்திக்குக்கு என் நன்றிகள். என் டீமில் இருந்து ஒருவர் வந்து படமெடுப்பது மகிழ்ச்சி. துரை எப்போதும் பரபரப்பாக இருப்பார். பாடல் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது. பாடலாசிரியர் பெயரைச் சொல்வதில்லை என கு கார்த்திக் சொன்னார் ஆனால் என் படத்தில் பால் டப்பா அனீஷ் கூப்பிட்டால் கூட இசை நிகழ்வுக்கு, வரவே மாட்டார், நான் ஏன் சார் வரனும் எனக் கேட்பார் இதையும் பதிவு செய்கிறேன். சேது, சதுரங்க வேட்டை போன்ற படங்கள் சின்ன பட்ஜெட்டில் சாதாரணமாக வெளியாகி, மக்களுக்குப் பத்திரிக்கையாளர்களுக்குப் பிடித்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது போல் இந்தப்படமும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் துரை K முருகன் பேசியதாவது…
முதலில் என் தயாரிப்பாளர் ஜேம்ஸுக்கு நன்றி. அவர் தந்த வாய்ப்பு தான் இயக்குநர். நான் கதைகள் வைத்துக்கொண்டு அலைந்த போது, ஜேம்ஸ் அவர் கஷ்டப்பட்ட கதையைச் சொன்னார். இன்று பலருக்கு உதவி செய்யும் நிலைக்கு வந்துள்ளார்.  இதே போல் இருங்கள் சார் நன்றி. இயக்குநர் ராஜேஷ் எம் சார், அவர் என்னைச் சேர்த்துக் கொண்டதால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டுள்ளேன் நன்றி சார். இப்படத்தில் கமிட்டானவுடன் நரேன் சாருக்கு தான் போன் செய்தேன். எனக்காக நடித்ததற்கு நன்றி. இனியா மேடம் மூன்று லுக்கில் அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சசி அவர். செண்ட்ராயன் என் நண்பன், சின்ன பாத்திரம் எனக்காக நடித்துள்ளார். தொழில் நுட்ப குழுவில் இசையமைப்பாளர் ஜுபின், சசிதரன், மற்றும் பாடலாசிரியர் கு கார்த்திக் எல்லோரும் நண்பர்கள். மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நண்பர் பாஸ்கர் ஆறுமுகம் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்துள்ளார்.  இந்த படத்தை 30 நாளில்  முடிக்க இவர்கள் தான் காரணம். சோனியா மேம் நல்ல ரோல் செய்துள்ளார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன் நன்றி.
தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,  இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் துரை K முருகன் இப்படத்தை  இயக்கியுள்ளார்.
Comments (0)
Add Comment