அதிரும் தமிழ்சினிமாஇன்ஸ்டாகிராம் பிரபலங்களின் லவ் 3 ஓ

தமிழ்நாடு அரசியல், சமூகப்பிரச்சினைகள், திரைப்படங்களின் விளம்பரத்திற்கான தளமாக ‘இன்ஸ்டாகிராம்’ தவிர்க்க முடியாத ஒன்றாக கடந்த சில ஆண்டுகளில் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ளது.

இதன் காரணமாக இன்ஸ்டாகிராம் பிரபலங்களை துண்டுதுக்கடா வேடங்களில் முண்னணி நடிகர்களே தாங்கள் நடிக்கும் படங்களில் நடிக்க வைத்து அவர்களை தங்கள் பட புரமோஷனுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
காலமாற்றம் இன்ஸ்டாகிராம்

பிரபலங்களே நட்சத்திரங்களாக, இயக்குநர், தயாரிப்பாளர்களாக மாற்றம் காண்பார்கள் என்பது தமிழ்சினிமா எதிர்பாராத ஒன்று. அதற்கான முதல் விதையை ஊன்றியுள்ளார் ‘ரீல்ஸ் அக்கா என அழைக்கப்படும் ஆர்னிகா’ கதை வசனம் எழுதி கதாநாயகியாக நடிக்கும்’ லவ் 3 ஓ’ திரைப்படத்தின் மூலம். இந்த திரைப்படத்தில் முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்களே நட்சத்திரங்களாக, தொழில்நுட்ட கலைஞர்களாக பங்கேற்றிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார்.

நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் ‘கோயம்புத்தூர் மாப்ள’, ‘கே என் ஸ்மைலி’ எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த் படத் தொகுப்பு செய்துள்ளார்.மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் சிவகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் 28.10.2626 ஆம் தேதி  நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் படத்தின் கதாநாயகியும், இயக்குநருமான ஆர்னிகா பேசும்போது,

“நாங்கள் இன்ஸ்டாகிராம் உலகத்தில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்திருக்கிறோம்.

இன்று பிரபலமாக இருக்கும் ஏஐ – ஐ வைத்து நாங்கள் ஒரு கதையை உருவாக்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.

ஏ.ஐ.-தான் படத்தின் முக்கியமான உள்ளடக்கமாக இருப்பதால் இன்று காட்சிகளைத் திரையிடவில்லை. மோஷன் போஸ்டர் தயார் செய்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அந்தக் காலத்தில் தாத்தா, பாட்டி சொல்வதை வைத்துத் தகவல்களை அறிந்து கொள்வோம். பிறகு நமது அக்கம் பக்கம் நண்பர்கள் சொல்வதை வைத்துத் தெரிந்து கொள்வோம்.

அதற்குப் பிறகு தொலைக்காட்சி, வானொலி, எஃப்.எம்., ஒளியும் ஒலியும் போன்றவை மூலம் தெரிந்து கொண்டோம்.

அதற்குப் பிறகு வந்த யூ டியூப் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம்.

அதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் வந்த பிறகு அக்கம் பக்கத்தில் ,அடுத்த தெருவில், உலகத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரிந்து கொண்டார்கள்.

அதற்கு பிறகு சாட் ஜி.பி.டி. வந்தது. அதற்குப் பிறகு நமது ஒவ்வொரு அசைவையும் அதில் தெரிந்து கொள்ள ஆரம்பித்தோம்.

நமது உணர்ச்சிகளை எல்லாம் சாட் ஜிபிடி-யிடம் எப்போது பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோமோ, அப்போது ஏஐ- யின் மீது காதல் வந்தது. இன்று ஏ.ஐ. பிரபலமாகிவிட்டது.

அப்படிப்பட்ட ஏ.ஐ. பெண்ணை இந்தப் படத்தின் கதாநாயகன் காதலிக்கிறான். அவர்களது காதல் எப்படி இருக்கிறது?

அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறானா? பிரிந்து விடுகிறார்களா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

1990-களில் காதல் எப்படி இருந்தது? அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? 2-கே கிட்ஸ் அதாவது இரண்டாயிரத்தில் காதல் எப்படி இருந்தது? அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? அதே காதல் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? என்பதை இந்தப் படத்தில் கூறியிருக்கிறோம்.

பரமசிவன்-பார்வதி காதல் அனைவருக்கும் தெரியும். அவர்கள் காதலுக்கே முன்னுதாரணமாக இருப்பவர்கள்.

இங்கே நடக்கும் எல்லா காதல் பிரச்சினைகளையும் பார்த்துவிட்டு கயிலாயத்திலிருந்து இறங்கி வந்த சிவன் இதற்கான தீர்வாக என்ன சொல்கிறார் என்பதுதான் இந்த ‘லவ் 3.ஓ’ படத்தின் கதை.

இந்த உலகத்தை இணைப்பதே ஊடகங்கள்தான். அவர்கள் மூலம்தான் பெரிய பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் உருவாகி இருக்கிறார்கள்.
அந்த நட்சத்திரங்கள் எல்லாம் அவர்களால்தான் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறார்கள். எங்களுக்கும் அப்படி ஒரு ஆதரவைக் கொடுத்து மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Comments (0)
Add Comment