அரசன் இரண்டாம் கட்டபடப்பிடிப்பு அறிவித்த சிலம்பரசன்

சிலம்பரசன் TR நடிப்பில் , வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன்TR,  விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி,  விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள்.  அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில்  கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதில் சிலம்பரசன் TR கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை சிலம்பரசன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Comments (0)
Add Comment