அரசியல்வாதிகளுக்கு நாகர்ஜுனா, சமந்தா பதிலடி

அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்கு, அரசியலுக்கு தொடர்பு இல்லாத திரை கலைஞர்கள் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள் என எச்சரித்துள்ளார் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா.தெலங்கான மாநிலஅமைச்சர்கொண்டா சுரேகாவுக்கு சந்திரசேகர்ராவ் மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ் அரசியல் ரீதியாக தன்னை பற்றி விமர்சித்ததற்காக தனது வழக்கறிஞர் மூலமாக அவதூறு வழக்கு தொடர்வது சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு பொது வெளியில் பதில் கூறும்போது
நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாகசைதன்யா  இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட தெலங்கானா முன்னாள் அமைச்சர்கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று தெலங்கானா மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா
கூறியிருப்பது தெலுங்கு
சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர்
கொண்டா சுரேகாவின் இந்த கருத்துக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கூறியுள்ளார் நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான  நாகர்ஜுனா, அதில்
“அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் எதிரிகளை விமர்சிப்பதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதியுங்கள். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்துக்கு எதிரான உங்கள் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அதே போன்று
நடிகை சமந்தாதனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “ஒரு பெண்ணாக, வெளியே வந்து பணிபுரிய, பெண்கள் வழக்கமாக போகப் பொருளாக நடத்தப்படும் ஒரு கவர்ச்சிகரமான துறையில் பிழைத்திருப்பதற்காக, காதலில் விழுந்து, அதிலிருந்து வெளியேறி, எழுந்து நின்று சண்டையிடுவதற்காகவும், நிறைய துணிச்சலும், வலிமையும் தேவை.
இந்த பயணம் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்பதில் நான் பெருமை அடைகிறேன். தயவு செய்து அதனை சிறுமைப்படுத்திவிடாதீர்கள். ஒரு அமைச்சராக உங்களுடைய வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தனிநபர்களின் சுதந்திரத்தைமதித்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.என்னுடைய விவாகரத்து என்பது தனிப்பட்ட விவகாரம், அது குறித்த ஊகங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய பரஸ்பர சம்மதத்துடனும் இணக்கமாகவும் நடந்த ஒன்று. அதில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லை. என்னுடைய பெயரை அரசியல் சண்டைகளில் பயன்படுத்த வேண்டாம்” இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்

 

Comments (0)
Add Comment