ஆக்க்ஷன் ஹீரோ ஆகிட்டிங்க சிவா ரஜினிகாந்த் பாராட்டில் சிவகார்த்திகேயன்

நடிகர் ரஜினிகாந்த் தனக்கு நெருக்கமானவர்கள் சம்பந்தபட்ட படங்களை பார்த்து தனக்கு பிடித்திருந்தால் பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் சக நடிகரான சிவகார்த்திகேயனை “ஆக்க்ஷன் ஹீரோவாகிட்டிங்க சிவா” என பாராட்டியுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதிவெளியானது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

மதராஸிதிரைப்படம் இதுவரை 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் படம் பற்றியதங்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதராஸி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அப்போது அவர்,” மை காட் எக்ஸலென்ட்.. என்ன பர்பாமன்ஸ்..! என்ன ஆக்க்ஷன்ஸ்.உ! சூப்பர் சூப்பர் எஸ்கே..! எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க.. காட் பிளஸ்.. காட் பிளஸ்..” என்று அவருக்குரிய ஸ்டைலில்,சிரிப்பில் கூறியதாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment