உருட்டு உருட்டு திரைப்பட விமர்சனம்

காதலைவிட மது முக்கியம் என்று நினைக்கும் நாயகன்.அப்படிப்பட்டவரை உயிருக்குயிராய் காதலிக்கும் நாயகி.இந்தக் காதலின் முடிவென்ன? என்பதை  சொல்லியிருக்கும் படம் உருட்டு உருட்டு.

நாயகனாக நடித்திருக்கும் நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ், காதல்,நடனம்,உணர்ச்சிகர நடிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான வேடம்.

நாயகியாக நடித்திருக்கும் ரித்விகா ஸ்ரேயா அறிமுக நடிகை என்று சொன்னால்தான் தெரியும் என்கிற மாதிரி நடித்திருக்கிறார்.

படத்தில் நாயகன் நாயகியை விட அதிக முக்கியத்துவம் மொட்டை ராஜேந்திரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.அவரும் மூன்று மனைவிகள் சகிதம் வாழும் அவரும் அவருடைய மனைவிகளாக நடித்திருக்கும் அஸ்மிதா, ஹேமா, சின்னாளப்பட்டி சுகி ஆகியோரும் ரசிக்க வைக்கிறார்கள்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர், சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் ஆகியோரும் அளவாக இருக்கிறார்கள்.

அருணகிரியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசை மோசமில்லை.ஒளிப்பதிவாளர் யுவராஜ் பால்ராஜ், வண்ணமாக்கியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் பாஸ்கர் சதாசிவம்.இதுதான் உச்சகட்டக் காட்சி என்று தீர்மானித்துவிட்டு திரைக்கதை எழுதியிருப்பார் போல.அதை நோக்கியே படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்.எல்லாவற்றையும் நகைச்சுவை கலந்து சொல்லவேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்.அதே கவனத்தை மொத்த கதையிலும் செலுத்தியிருக்க வேண்டும்.

கூட்டத்தில் இருந்தாலும் தனித்துத் தெரியும் படமாகக் கொடுத்திருப்பதால் அவருக்கு நற்பெயர்.

 

Comments (0)
Add Comment