எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மாஸ்க் முன்னோட்டம் …

கவின் நடித்துள்ள டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’. அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் முன்னோட்டம் நேற்று(09.11.2025) வெளியிடப்பட்டுள்ளது.
முன்னோட்டம் எப்படி?
இதுவரை பார்க்காத கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா, எம்.ஆர். ராதா முகமூடி என விறுவிறுப்பான ட்ரெய்லர் கட் என பல சுவாரசியங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. மத்தியதர மக்களின் அன்றாட பிரச்சினைகளைபேசும் வாய்ஸ் ஓவருடன் தொடங்கும் ட்ரெய்லர் அடுத்தடுத்து நாயகன்கவின், வில்லி ஆண்ட்ரியாவை சுற்றி நகர்கிறது. இயக்குநர் நெல்சன் படங்களின் பாணியிலான டார்க் காமெடி, அவை ட்ரெய்லரில் பயன்படுத்தப்பட்ட விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை ட்ரெய்லருக்கு வலு சேர்க்கிறது. படத்தின் மேற்பார்வை இயக்குநர் வெற்றிமாறன் என்பதால் வணிகரீதியாக படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
Add Comment