கங்குவாவை தொடர்ந்து 12000 ம் திரைகளில் வெளியாகும் புஷ்பா – 2

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் ‘புஷ்பா 2’. இப்படம் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.

உலக அளவில்12 ஆயிரம் தியேட்டர்களில் புஷ்பா – 2 படத்தை வெளியிட உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதுவரை வெளியான இந்தியப் படங்களின் ஐமேக்ஸ் தியேட்டர் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இந்தப் படத்திற்குஇருக்கும் என்கிறார்கள்.

‘புஷ்பா 2’ வெளியாக உள்ள நாளில் தமிழில் கூட வேறு நேரடி தமிழ்படங்கள் எதுவும் வெளிவராத  சூழல் காரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாக உள்ளது தமிழில் வெளியான கங்குவர 11000 ஆம் தியேட்டர்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment