அல்லு அர்ஜூன்புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமானவர்.தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
இப்போது, அல்லு அர்ஜூன், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில், இன்னொரு மைல்கல்லாக அமைந்தது.
ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருது, விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், இப்போது, தேசிய நட்சத்திரமாக மாறியுள்ளார்.