கம்யூனிஸ்ட்டாக சிவராஜ்குமார் நடிக்கும் கும்மடி நராசைய்யா

கர்நாடக மாநில அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தை பரமேஷ்வர் ஹிவ்ராலே இயக்குகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘கும்மடி நரசைய்யா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.

பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சுரேஷ் பாபிலி இசையமைக்க உள்ளார்.

‘கும்மடி நரசைய்யா’ திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

இந்த நிலையில், ‘கும்மடி நரசைய்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவராஜ்குமார் எளிமையான அதே நேரம், வலிமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கண்கண்ணாடி அணிந்து, வெள்ளை குர்தா –பைஜாமா மற்றும் தோளில் சிவப்பு துண்டு போர்த்திய நிலையில், சைக்கிளை தள்ளிச்செலும் காட்சியில், பின்னணியில் சட்டமன்றம் தெரிகிறது. சைக்கிளில் தொங்கும் நெல் மற்றும் சுத்தியல் சின்னம் கொண்ட சிவப்புக் கொடி, அவரது இடதுசாரி சிந்தனையையும், அரசியலின் தன்மையையும்  வெளிப்படுத்துகிறது. கும்மடி நரசைய்யாவின் பணிவு மற்றும் உள்மன வலிமையை சிவராஜ்குமார் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்

 

Comments (0)
Add Comment