பஞ்ச்’ வசனங்கள் பேசும் அரசியல் படமாக இல்லாமல், மக்களின் உணர்வுகளைப் பேசும் படைப்பாக ‘கராத்தே பாபு’ இருக்கும் என்ற நம்பிக்கை படத்தின்முன்னோட்டம் மூலம் தெரிகிறது.
ஒரு நடிகரின் வளர்ச்சி என்பது அவர் ஏற்கும் கதாபாத்திரங்களின் மாற்றத்தில் மட்டுமல்ல, அந்த மாற்றங்களை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதில்தான் அடங்கியிருக்கிறது.
அண்மையில் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாகத் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய ரவி மோகன் இப்போது தனது 34-வது படமான ‘கராத்தே பாபு‘ மூலம் அரசியல் திரைக்கதையில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது
காராத்தே பாபு கதைகளம் என்ன?
“அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சைத் தாண்டி, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் நியாயங்களை இந்தப் படம் பேசும்” என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.
முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சட்டசபை காட்சி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரவி மோகனின் பழைய பெயர் ‘கராத்தே பாபு’ என்பதுதான் இந்தப் படத்தின் மையப்புள்ளி. அரசியலில் இருக்கும் ஒருவருக்கு ஏன் இப்படியொரு பெயர்? அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன? என்பதுதான் படத்தின் திரைக்கதையாக இருக்கும் என்று தெரிகிறது. முன்னோட்டம்
மூலம் ‘ரவி மோகன்’ இப்படத்தில் இரட்டை முகம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை முன்னோட்டம் உணர்த்துகிறது.
மூலம் ‘ரவி மோகன்’ இப்படத்தில் இரட்டை முகம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை முன்னோட்டம் உணர்த்துகிறது.
முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள
வசனங்கள் ஒவ்வொன்றும் அரசியல் அனல் கக்குகின்றன.
“நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலையே தொழிலா பண்றவன்!”
“ஊருக்குள்ள புலி வர வரைக்கும் வேட்டைக்காரனைப் பத்தித் தான் அந்த ஊரே பேசும், ஒரு நாள் புலி வரும்!”
இந்த வசனங்கள் சமகால அரசியல் சூழலோடு ஒத்துப்போவதாக தெரிகிறது.
‘பராசக்தி’ படத்தில் ஒரு ‘ரா’வான நடிப்பைக் கொடுத்த ரவி மோகன், இதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு அதிகாரமிக்க ஆளுமையாகத் தெரிகிறார்.
‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் மற்றொரு முக்கிய அம்சம், இதன் நட்சத்திரப் பட்டாளம். தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் ‘தவ்தி ஜிவால்’ இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.மேலும்,
நாசர் தமிழக முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கிறார்.சக்தி வாசுதேவன் & விடிவி கணேஷ்: இவர்கள் இருவரும் கதையின் போக்கை மாற்றும் முக்கியத் தூண்களாக இருக்கிறார்கள்.
இவர்களுடன் காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை முன்னோட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்த்துள்ளது. குறிப்பாக, அரசியல் மோதல்களின் போது எழும் இசை, காட்சிகளின் தீவிரத்தைக் கூட்டுகிறது. எழில் அரசுவின் ஒளிப்பதிவு சட்டசபை மற்றும் சண்டைக் காட்சிகளை மிகவும் தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது.
இவர்களுடன் காளி வெங்கட், பிரதீப் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை முன்னோட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தைச் சேர்த்துள்ளது. குறிப்பாக, அரசியல் மோதல்களின் போது எழும் இசை, காட்சிகளின் தீவிரத்தைக் கூட்டுகிறது. எழில் அரசுவின் ஒளிப்பதிவு சட்டசபை மற்றும் சண்டைக் காட்சிகளை மிகவும் தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது.
இப்படத்திற்கு இயக்குநர் ரத்ன குமார் மற்றும் பாக்கியம் சங்கர் ஆகியோர் திரைக்கதையில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’, வரும் 2026 கோடையில் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.