சூர்யாவின் பிறந்தநாளை (23.07.2025) முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் முதல் பார்வைஜூலை 22 ஆம் தேதி வெளியானது நேற்று காலை படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கி, மலையாளம்,
கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் கருப்பு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கும்சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி, படத்தின் இயக்குநர் R.J. பாலாஜிஉள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.
சூர்யாவின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் டீசரை படக்குழு 23.07.2025 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
முன்னோட்டம் எப்படி?
தொடக்கத்தில், “கற்பூரம் காட்டி கண்ணுல ஒத்திக்குற சாந்தமான சாமி இல்ல.. மனசார வேண்டிக்கிட்டு மிளகா அர்ச்சா… உடனே நியாயம் குடுக்குற முரட்டு தனமான சாமி” என்ற வசனம் வருகிறது. இந்தக் காட்டமான வசனத்துடன் கூடிய முன்னோட்டத்திற்குபின்னணி
இசை பலமாக உள்ளது.
இப்படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் கருப்பசாமி போல சூர்யா வருவதாக டீசரில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஆர்ஜே பாலாஜி இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்த டீசரில் சூர்யாவுக்கும்ஆர்.ஜே.பாலாஜிக்குமான மோதல்கள் காட்சிப் படுத்தப்பட்டிருப்பது அதை உறுதி செய்கிறது. சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் சிங்கம் போன்ற ஆக்க்ஷன் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றது. வழக்கறிஞர் வேடத்தில் அவர் நடித்து ஓடிடியில் வெளியான” ஜெய்பீம்” மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு பின் சூர்யா நடிப்பில் வெளியான எந்தவொரு படமும் குறைந்தபட்ச வெற்றியை பெறவில்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்” கருப்பன்” திரைப்படம் இருக்கும் என முன்னோட்டம் உணர்த்துகிறது.