கவிஞர் முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணை
நெய் இணைந்து இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கத்திற்கு சென்னையில் 29.03.2025 ஆம் தேதிபாராட்டு விழா நடத்தியது.
இவ்விலாவில்நடிகர் சிவகுமார், முன்னாள் சென்னை மாநகரமேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், விஐடி பல்கலைக்கழக வேந்தர்
கோ. விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
காற்றில் விதைத்த கருத்து நூலின் இரண்டாவது பதிப்பும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இந்த நூலை வெளியிட விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
கவிஞர் முத்துலிங்கம் பற்றிய குறும்படம் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றது.
Comments (0)
Add Comment