இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்திற்கு பின் இயக்கிய படம் ‘காந்தி கண்ணாடி’. செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான இந்த படம், சுவாரஸ்யமான உள்ளடக்கம், இயல்பான நடிப்பு மற்றும் ஆழமான உணர்வுகளுக்காக பாராட்டுகளையும் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த படத்தில்
கே.பி. பாலா மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி முன்னணி வேடத்தில் நடித்தத்துள்ள இப்படத்தில், பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.
காந்தி கண்ணாடி படத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில், அந்தபடத்தின் தமிழ்நாடுவிநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் தனது அலுவலகத்தில் ‘காந்தி கண்ணாடி’ படக்குழுவினரை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார். நிகழ்வில் படத்தின்
தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசுகையில்
“காந்தி கண்ணாடி தயாரித்த அனுபவம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இப்போது மக்களிடம் இருந்து இவ்வளவு அன்பும் பாராட்டும் கிடைப்பது, உண்மையான கதை எப்போதும் மனங்களைத் தொட்டே தீரும் என்பதை நிரூபிக்கிறது” என்றார்.
சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன் பேசுகையில்
“சக்தி ஃபிலிம் பேக்டரியில் நாங்கள் எப்போதும் கருத்துகள் நிறைந்த சினிமாவையே ஆதரிக்கிறோம். அது மக்களை மகிழ்விப்பதோடு, மனதில் நீண்டகாலம் நிற்கும். காந்தி கண்ணாடி அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.
இவ்விழா, படத்தின் வசூல் வெற்றியை மட்டுமின்றி, உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாட்டு பார்வையாளர்களின் ஆதரவை வெளிப்படுத்திய முக்கியக் களமாக அமைந்தது என்கிறார் தயாரிப்பாளர்.