கும்கி – 2 முதல் பார்வை வெளியானது.

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கும்கி 2’ படத்தின் முதல் பார்வைவெளியிடப்பட்டுள்ளது.
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பிராமைய்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கும்கி’. இப்படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள் உள்ளிட்டவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் .
கும்கிபடத்தின் மூலமாகவே நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமானார். தற்போது இதன் 2 ஆம் பாகத்தினை உருவாக்கி இருக்கிறார் பிரபு சாலமன். ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் ‘கும்கி 2’ படத்தின் மையக்கரு என கூறப்படுகிறது.

இதில் நாயகனாக மதி அறிமுகமாகிறார்.  இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். மேலும் ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பேரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘கும்கி 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், எடிட்டராக புவன், இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தினை பென் ஸ்டூடியோஸ் மற்றும் பென் மருதர் சினி எண்டர்டெயின்மென்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தற்போது இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Comments (0)
Add Comment