கொம்புசீவி படத்திற்காக இளையராஜாவுடன் இணைந்த யுவன்சங்கர் ராஜா

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில்
 மதுர வீரன், படை தலைவன் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. வணிக ரீதியாக இவ்விரு படங்களும் வெற்றி பெறவில்லை.சிவகார்த்திகேயன் நடிப்பில்வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன், சீமராஜா போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில்
 சண்முக பாண்டியன் நடித்து வரும் ‘கொம்புசீவி’ திரைப்படம் தயாராகி வருகிறது.  இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கொம்பு சீவிபடத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்தஇந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன. தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் நிறுவனம் கொம்புசீவி படத்தின் மேக்கிங் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது..‘கொம்புசீவி’ படத்தின் ‘உன்ன நான் பாத்தா’ வீடியோ பாடலை யுகபாரதி வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடியிருந்தார்.
இந்நிலையில் , ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர். கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான “அம்மா என் தங்ககனி,நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்” என்ற பாடலை இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து  பாடியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் ‘கொம்புசீவி’ படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என படக்குழு கருதுகிறது.

 

Comments (0)
Add Comment