கொலை சேவல் – திரைப்பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஆணவப் படுகொலைகள் பற்றி வருடந்தோறும் திரைப்படங்கள் வந்து கொண்டு இருக்கின்றது. அந்த வரிசையில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம்
” கொலை சேவல்”
சாமியே வந்து சொன்னாலும் சாதி இல்லை என்பதை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை சொல்லி, சாதி வெறிக்கு எதிராக படம் எடுப்பதாக நினைத்து ஆணவ கொலைகாரர்களிடம் கூட இல்லாத வக்கிரத்தை உச்சகட்டமாக படமாக்கியுள்ளார் இயக்குநர்.
கலையரசனை காதலிக்கும் தீபா, பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொள்கிறார். உறவுகளை துறந்துகலையரசன் குடும்பத்தினருடன்  வாழ்கிறார்.
குல வழக்கப்படி நிறைமாத கர்ப்பிணியான தீபாவை, குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார் கலையரசன். மகளின் கணக்கை முடிக்க கணவனையும், மகனையும் அனுப்புகிறார் அம்மா.

குடும்பத்துடன்சாமி கும்பிட்டு எல்லோருடனும் வீடு திரும்பாமல் ஓய்வு எடுத்து திரும்ப விரும்பும் கலையரசன், தீபா ஜோடி மலைக்குள் நின்றுவிட பழிவாங்க காத்திருக்கும் கும்பல் காதல் ஜோடிகள் மீது பாய்கிறது. அதில் இருந்து தப்பித்தார்களா என்பது மீதிக்கதை.

கலையரசன் நடிக்கும் வழக்கமான கதாபாத்திரம் அதற்கு இயல்பாக பொருந்தி போகிறார்.முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கதாநாயகிதீபா பாலு.
பாலசரவணன்,கஜராஜின் நடிப்பும், ‘ஏதாவது செய்யேன்பா…’ ரகம். விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜய லட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோரின் நடிப்பில் குறையில்லை. வில்லனாக வரும் ஆதவ் சந்திரா கவனிக்க வைத்துள்ளார்.

திரும்புகிற பக்கமெல்லாம் பசுமை போர்த்திய மலைகளும், நீர் ஓடைகளும்பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவை எளிதாக்குகிறது. சந்தனின் இசையும் படத்துடன் ஒன்ற வைத்தாலும், சில இடங்களில் ‘ஒரே மாதிரியா இருக்கே…’ என்று சலிப்பூட்டுகிறது.

எதார்த்தமான கதைக்களம் பலம் என்றாலும், காட்சிகளின் நீளம் ‘இது தேவையா?’ என்கிற கேள்விகளை எழுப்புகிறது.ஆணவ கொலைக்கு எதிராக பேசி, கொடூரமான வக்கிர கொலையை காட்சிப்படுத்தியதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர்? வி.ஆர்.துதிவாணன்.
கலை வடிவத்தை – கொலை செய்திருக்கிறது” கொலை சேவல்”
Comments (0)
Add Comment