சட்டமும் நீதியும் – வெப் சீரிஸ் விமர்சனம்

திரைப்படங்களைகாட்டிலும் இணைய தொடருக்குபார்வையாளர்கள் அதிகரித்து வரும் காலம்.ஒரு கொலை அல்லது பல கொலைகள் அல்லது யாராவது ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவது ஆகிய நிகழ்வுகளில் காவல்துறை விசாரணை அடிப்படையிலான இணைய தொடர்கள் விறுவிறுப்பாகச் செல்லக்கூடியவை.அந்த வரிசையில் வந்திருக்கும் இணையத் தொடர் சட்டமும் நீதியும்.ஏழு பகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொடரில் காவல்துறைக்குப் பதிலாக ஒரு வழக்கறிஞர்விசாரணையில் ஈடுபடுகிறார்.
நீதிமன்றத்திற்கு வெளியே புகார்களை எழுதிக் கொடுக்கும் வழக்கறிஞராக சக
வழக்கறிஞர்களால்  மதிக்கப்படாதவராக இருக்கும் சரவணன், ஒரு பெண் காணாமல் போன வழக்கைகையிலெடுக்கிறார்.
அதில் பல்வேறு மர்மமுடிச்சுகள்.
அவற்றை அவர் எவ்வாறு கையாள்கிறார்கடைசியில் என்னவானது? என்பதைச் சொல்லியிருக்கிறது இந்தத் தொடர்.

பலரால் எள்ளி நகையாடப்படும் வழக்கறிஞராகநடித்திருக்கும் சரவணன், சாதரணமாக அறிமுகம் ஆகி விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்

அந்த வழக்கைக் கையிலெடுத்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துச் செல்வதும் அப்போது நடக்கும் நிகழ்வுகளும் சரவணனின் அனுபவ நடிப்பால் மேலும் மெருகேறுகிறது.
சரவணனிடம் உதவியாளராகச்
சேர வரும் பாத்திரத்தில் நம்ரிதா நடித்திருக்கிறார்.அவருடைய இருப்பும் அதில் அவர் நடிப்பும் திரைக்கதையை மேலும் சுவாரசியமாக்குகிறது

அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் ஆகியோரும் தொடரில் நடித்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்துக்குள் பெரும்பகுதி திரைக்கதை நகர்வதால் ஒளிப்பதிவாளருக்குப் பெரிய வேலை இருக்காது என்று நினைத்தால் அதிலும் பல்வேறு கோணங்களை வைத்து தன் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுலகிருஷ்ணன்.
விபின்பாஸ்கர் தனதுபின்னணி இசையால் சரவணன் கதாபாத்திரத்தைப் பன்மடங்கு வலிமை படுத்துகிறார்.
தொடர் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகரவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உழைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ராவணன்.

தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ்,சரவணனின் பாத்திரப் படைப்பில் சுவாரசியம் கூட்டியிருக்கிறார்.சரவணன் மட்டுமே இருந்தால் போதாதென்று நம்ரிதாவை அழகாகக் காட்டியிருக்கிறார்.பழகிய கதைக்களம் தானே என்று யாரும் அசட்டையாக  உட்கார்ந்துவிடாதபடி காட்சிகளை அமைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

Comments (0)
Add Comment