தொடக்கப் பள்ளி தொடங்கி, அதனை நடுநிலைப்பள்ளியாக உயர்த்தி அது உயர்நிலைப்பள்ளியாக உயர்வது வரை எவ்வளவு கல்விக்கு எதிரானவர்கள் நடத்தும் சூழ்ச்சிகள் எதிர்ப்புகள், போராட்டங்கள் வலிகள் என்பனவற்றைக் கருவாகக் கொண்டு அவற்றைச் சரியான முறையில் காட்சிப்படுத்தி இருக்கும் திரைப்படம் சார்.
நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவியை படத்துக்கும் பாடல்களுக்கும் ஒரு நாயகி தேவை என்பதற்காக வைத்திருக்கிறார்கள் என்று எண்ணும் நேரத்தில் கதைக்குள்ளும் அவரைக் கொண்டுவந்துவிட்டார்கள்.
கறுப்புச்சட்டையோடு பள்ளி ஆசிரியராக வரும் நடிகர்சரவணன் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கத் துடிக்கிறார்.அவர் பேசும் வசனங்கள், நடத்தும் பாடங்கள்,மனநிலை தவறியவராக நடிக்கும் நடிப்பு ஆகியனவற்றில் முத்திரை பதிக்கிறார்.
வ.ஐ.ச.ஜெயபாலன் மற்றும் தயாரிப்பாளர் சிராஜ் ஆகியோர் எதிர்மறை வேடமேற்றிருக்கிறார்கள்.
ரமா,எலிசபெத்,சரவணசக்தி,
இனியன் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவு,திரைக்கதைக்குப் பலம் கூட்டியிருக்கிறார்
சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.கதையின் கருத்துகளை பாடல்வரிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் போஸ்வெங்கட்.கிராமங்களில் இன்றும் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் விளைவுகள் ஆகியனவற்றைப் பின்புலமாக வைத்து கல்வியை முன்னால் நிறுத்தி கதை சொல்கிறார்.கஜராஜ் கதாபாத்திரத்தை வைத்து ஆதிக்கசாதியினருள் இருக்கும் ஜனநாயகசக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்
கல்விக்கு எதிராக கடவுள்பக்தியை முன்னிறுத்தி சூழ்ச்சி செய்வதாகச் சொல்லியிருக்கிறார்.சிறுதெய்வ வழிபாடுகள் வர்ணாஸ்மரத்துக்குள் வராது என்பதைக் கவனத்தில் கொண்டிருக்கலாம்.