சினிமாவை மறக்கடிக்கும்”மிஸ்டர் அன்ட் மிஸஸ்” திரைப்பட விமர்சனம்

தமிழ்சினிமாவில் சர்ச்சைக்குரியவராக வலம் வரும் நடிகை வனிதா விஜயகுமார் திரைக்கதை வசனம் எழுதி நாயகியாக நடித்து இயக்கியிருக்கும்படம் மிஸ்டர் அன்ட் மிஸஸ்எப்படி இருக்கிறது …..
 ”இப்ப, குழந்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் பின்னால ரொம்ப கஷ்டம், வயசாகிவிட்டதே”னு சிலர் 40 வயதானவனிதாவை உசுப்பேற்ற, அவரும் உடனே அம்மாவாக நினைக்கிறார். ஆனால், குழந்தை வேணாம் என்கிறார் 45 வயதாகும் ராபர்ட். அம்மாவாகியே தீருவேன் என்று வனிதா பல ரொமான்ஸ் முயற்சிகள் செய்ய, அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடல்ட் கன்டன்ட்டில் சொல்லும் படம் மிஸஸ் அன்ட் மிஸ்டர்.

நாற்பது வயது பெண்ணின் குழந்தை கனவு, கரு உருவாக ஏற்படும் சிக்கல், அதனால் கணவன் மனைவி இடையே உருவாகும் பிரச்னைகள், சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகள் கடைசியில் குழந்தை பிறந்ததா என்பது நல்ல கரு. ஆனால், அதில் அடல்ட் கன்டன்டை கலந்து கொடுத்து இருப்பதால் கதை வேறு மாதிரி செல்கிறது.

அம்மாவாகும் ஏக்கம், அதற்காக போடும் திட்டங்கள், கணவருடன் சண்டை, ரொமான்ஸ் காட்சிகளில் வனிதா நடிப்பும் ஓகே. என்ன, கதை நாயகியாக நடிப்பதால் வெயிட் குறைத்து, அதற்கேற்ப காஸ்ட்யூமுடன் நடித்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். குளோசப் காட்சிகளில பயமுறுத்துகிறார்.

ராபர்ட் தன் கேரக்டர் அறிந்து நன்றாகவே நடித்து இருக்கிறார். அவர் நண்பராக வரும் கணேஷ், வனிதாவுக்கு ஐடியா கொடுக்கும் ஆர்த்தியும் மனதில் நிற்கிறார்கள். தெலுங்கு கலந்து பேசி ஓவர் ஆக்டிங் செய்து இருக்கிறார் அம்மாவாக வரும் ஷகிலா. அவர் டீமில் இருக்கும் ஆன்ட்டிகளின் அட்டகாசம் திரைக்கதைக்கு தேவையில்லாதது.

பாங்காக், சித்துார் என 2 இடங்களில் கதை நடக்கிறது. பாங்காக் காட்சி ஆறுதல் என்றால், சித்துார் காட்சிகள் ரொம்பவே கொடுரமானது.

 கணவரை தன் வழிக்கு கொண்டு வர வனிதா போடும் திட்டங்கள் ஓகே என்றாலும், அதை அடல்ட் கன்டன்ட்டில் சொல்லி இருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. அதிலும் சில காட்சிகள் ஓவரோ ஓவர். சென்சார் தெரிந்து, புரிந்து விட்டார்களா, புரியாமல் விட்டார்களா என்று கேட்கும் அளவுக்கு ஒரு சில சீன்கள் உள்ளன. வனிதா, ராபர்ட்டிற்கு பதில் வேறு இளம் நடிகர்கள் நடித்து இருந்தால் வேறு மாதிரி இருந்து இருக்கலாம்.

இவர்களுக்கு இடையில் டாக்டர் சீனிவாசன் அவ்வப்போது வந்து இம்சை கொடுக்கிறார். அவரை நடிக்க வைத்தது ஏன் என்றே புரியவில்லை. வனிதா உறவினராக வரும் ஸ்ரீமன் நடித்து தள்ளுகிறார். இதில் அந்த கால ஷகிலா சம்பந்தப்பட்ட காட்சிகள் வேறு.படத்தில் எடிட்டர் ஒருவர் இருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு தேவையில்லாத சீன்கள் நிறைய. இந்த கதைக்கு அடல்ட் கன்டன்ட் திணிப்பு ஏன், அப்படியே யோசித்து இருந்தாலும் அதை வேறு மாதிரி கொடுத்து இருந்தால் ஓரளவு ரசித்து இருக்கலாம். ரொம்பவே ராவாக கொடுத்து பெண்களை திட்ட வைக்கிறார். ஆண்களை வெறுப்பேற்றுகிறார் வனிதா.

ஸ்ரீகாந்த்தேவா இசை ஓகே. படத்தில் சரியான இடத்தில் வரும் கிரணின் ராத்திரி சிவராத்திரி ரீமிக்ஸ் பாடல், அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் ஓகே. வனிதாவிற்கு படம் தயாரிப்பு, இயக்கம், கதைநாயகியாக நடிப்பு இதெல்லாம் நல்ல கனவு, அதற்காக உழைக்க வேண்டாமா? எந்த தைரியத்தில் இந்த படத்தை மக்கள் ரசிப்பார்கள் என தன் மகளை தயாரிப்பாளராக்கி இயக்கி நடித்தார் எனதெரியவில்லை.
T
Comments (0)
Add Comment