சிறை நாயகன் நடிக்கும் புதிய படம்

சிறை ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் அறிமுகநடிகர் L. K. அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது13’ வது தயாரிப்பாக தயாரிக்கின்றது.
 அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன் மற்றும் ‘டியூட்’ படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில்  S. S. லலித் குமார் தயாரிக்கிறார்.
 தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த படத்தை எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Comments (0)
Add Comment