சிலம்பரசன் வெளியிட்ட’ டெலிவரி பாய்’ முன்னோட்டம்

திமுக பிரமுகரும், பட்டிமன்ற பேச்சா ளருமானதிண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர் சிலம்பரசன்  வெளியிட்டுள்ளார். நானி இயக்கத்தில், சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையில்அமுதா லியோனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

அம்மா – மகன் பாசத்துடன் தொடங்கும் முன்னோட்டம் அடுத்தடுத்த காட்சிகளில் திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் எதிர்பாராமல் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அவன் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பதை இப்படம் பேசுகிறது. குடும்ப உணர்வுகள், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான திரைப்படமாக இது இருக்கும் என தெரிகிறது.

இப்படத்தில் லியோ சிவக்குமாருக்கு ஜோடியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், போஸ் வெங்கட், ஜென்சன் திவாகர், துஷ்யந்த் மற்றும் உதயா தீப் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

Comments (0)
Add Comment