சூரி நாயகனாக நடிக்கும் ஏழாவது படம் தொடங்கியது

இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில்,  சூரி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் சென்னையில் தொடங்கியது!

நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ‘மண்டாடி’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிக்கர்ஸ் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் நான்காவது தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்திற்கு ‘சூரி 7’ என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் தொடக்க விழா அக்டோபர் 14-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி படம் குறித்து கூறியதாவது

“தமிழில் நாங்கள் தயாரித்த ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’, ‘இருமுடி’ ஆகிய படங்களுக்குக் கிடைத்த வெற்றியும், வரவேற்பும், இந்த மொழியில் மேலும் பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு அதிகரித்தது.

தற்போது சூரி நடிக்கும் இந்தப் புதிய படத்தை தயாரிக்கிறோம்.

நிகழ்வில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கும் சூரிக்கும் இடையே இருந்த நட்பையும், அன்பையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் அனைத்து திரையுலகப் பிரபலங்களுக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார் பகிர்ந்து கொண்டதாவது,

“மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதாநாயகனாக சூரி தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார். அவரது திறமை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யும் வகையில் அவரைத் திரையில் காட்ட வேண்டிய கூடுதல் பொறுப்பு எனக்கு இருக்கிறது.
மிகுந்த உற்சாகத்துடன் இந்தப் படத்தைத் தொடங்குகிறோம். ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும்” என்றார்.

‘விடுதலை பாகம் 1’, ‘விடுதலை பாகம் 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ என கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடித்து கதாநாயகனாக தனக்கென தனியிடம் பிடித்துள்ளார் நடிகர் சூரி.

அவரது சமீபத்திய வெளியீடான ‘மண்டாடி’ திரைப்படம், வசூல் ரீதியாக அவரது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார்.
படத்தின் தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Comments (0)
Add Comment