சூர்யா நடிக்கும் படத்தை மீண்டும் இயக்கும் த. செ.ஞானவேல்

சூர்யா நடிப்பில் இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைஇயக்கியவர்த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின்  கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற வெற்றி படங்களைத் தயாரித்த
இந்திய சினிமாவில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஹொம்பாலே பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது
ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படம் பற்றி கூறும்போது, ’’தமிழ்நாடு, தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒருசேர பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.
இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் அவர்கள், அழுத்தமான கதைகளத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாக கையாண்டு வெற்றிகளைத் தரக்கூடியவர். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து செல்லும் சிறந்த வெற்றி திரைப்படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். The one சூர்யா அவர்களையும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு சிறந்தப்படங்களை தயாரிப்பதிலும், அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடைய செய்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது. இந்த  தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குனர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது என்றார்.படத்திற்குசாய் அபயங்கர் இசையமைக்கிறார்.  கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் போன்ற சிறந்த கலைஞர்கள் நடிக்கிறார்கள்.ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
Comments (0)
Add Comment