தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இதில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 40 வயதிலும் தனது கனவுகளைத் துரத்தும் சர்வதேச
துப்பாக்கி சுடும் வீரராக, சூர்யா
நடித்துள்ளார். அவரை காதலிக்கும் 20 வயது பெண்ணாக மமிதா பைஜு நடித்துள்ளார். இருவருக்குமான வயது வித்தியாசம் கொண்ட வழக்கத்துக்கு மாறான காதல் கதை இதன் முன்னோட்டத்தில்தெரிகிறது.
அவருடைய ஸ்டைலான தோற்றம், கதைக்குப் புத்துணர்ச்சியை வழங்குகிறது.