56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக அமரன் திரையிடப்படுகின்றது.
கோவாவில், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர்20 முதல் நவம்பர்28 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த சுமார் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன.
விழாவில் நடைபெறும் சர்வதேச போட்டியின் கீழ் தங்க மயில் விருதுக்கு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.