சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”.
2025மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, 26.04.2025 மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
நாயகன் ஆதம் ஹசன் பேசியதாவது…
இந்த படம் 2,3 ஆண்டுகளாக எடுத்தோம். நான் கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன், இங்கு வந்து போகும் நாட்களில்தான் இந்தப்படம் எடுத்தார் இயக்குநர்.
எனக்கே நம்பிக்கை போய்விட்டது. என்னை மாற்றிவிடுவார் என நினைத்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.இந்தப்படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. கேரளா நண்பர்கள் இந்தப்பட விழாவிற்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துத் தான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள். டிரெய்லர், மூணு பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. இந்த வருடம் இதுவரைவெறும் 4 படம் வெற்றி. போன வருடம் 220 படங்களில் 8 படம் தான் வெற்றி. சின்ன படங்களில் 15 படம் வெற்றி. பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால் மட்டும் தான் ஓடும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி புது நாயகன் நாயகியைப் போட்டுப் படமெடுத்தால் படம் ஓடும். அகமொழி விழிகள் என்ன அழகான டைட்டில். அஜித்குமார்எப்போதும் தமிழ் டைட்டில் வைப்பார் ஆனால் இயக்குநர் எவனோ குட் பேட் அக்லி என டைட்டில் வைத்து விட்டான். இப்போது சிவக்குமார் மகன் சூர்யா ரெட்ரோ என டைட்டில் வைத்துள்ளார். தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது. கேரள சகோதரர் தமிழில் டைட்டில் வைக்கிறார் தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை. நல்ல மனம் குளிர்ந்து மகிழ்ந்து அகமொழி விழிகள் ஜெயிக்க வாழ்த்துகிறேன் என பேசினார்.