தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 1995 ஆம் ஆண்டு அதிக படங்களில் நடித்து வந்தவர் ‘பூவே உனக்காக’ புகழ் நடிகை சங்கீதா. தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு 2000 ஆம் ஆண்டில் இருந்து நடிப்பதில் இருந்து விலகியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2014ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த ‘ நகர வரிதி நடுவில் நிஞ்சன்’ எனும் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்சங்கீதா.
அதனைத் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்து வந்தார் நடிகை சங்கீதா.
அதனைத் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்து வந்தார் நடிகை சங்கீதா.
தமிழில்கடைசியாக 2000-மாவது ஆண்டில் வெளியான கண் திறந்து பாரம்மா என்ற படத்தில் நடித்திருந்தார் சங்கீதா.
தற்போது 25 வருட இடைவெளிக்குப் பிறகு பரத் நடிப்பில் உருவாகி வரும் ‘காளிதாஸ் 2’ தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சங்கீதா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பவானி ஸ்ரீ, அபர்ணதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.”