தமிழில் வெளியாகும் கேடிதி டெவில் கன்னட திரைப்படம்

KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், பிரேம் இயக்கத்தில்,  துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் கேடி தி டெவில் ( KD The Devil ).
பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், 12.07.2025 காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
 இந்நிகழ்வினில் படக்குழு சார்பில் நாயகன் துருவ் சர்ஜா, நாயகி ரீஷ்மா, நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் பிரேம் மற்றும் தயாரிப்பாளர் சுப்ரீத் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்… இயக்குநர் பிரேம் பகிர்ந்து கொண்டதாவது…
கேடி ஒரு வித்தியாசமான படம், 1970 களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம், டீசர் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  1970களில் இருந்த  பெங்களூர் நகரின்  தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும் வகையில், இது வரலாற்றில் நிகழ்ந்த  ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது. பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலவையில், முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது என்றார்.
 இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

Comments (0)
Add Comment