லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள படம் ‘லீடர்’. இதன் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. படத்தின் தணிக்கை பணிகளும் முடிவுற்றது. இதனால் ஏப்ரல் 9 ஆம் தேதி ‘லீடர்’ வெளியாகும் என அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம், லால், சந்தோஷ்
ஆகியோர்நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லீடர்’. லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
‘லீடர்’ படத்தினைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தினையும் துரை.செந்தில்குமாரே இயக்கவுள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பின்பு, அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.