திமுக வர்த்தக அணி துணை செயலாளர் செல்வகுமாரை பாராட்டிய தயாரிப்பாளர்கள்

நடிகர் விஜய் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன்பே அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் திரைப்படங்களுக்கும், அவருக்கும் செய்தி தொடர்பாளராக பணியாற்றியவர் பி.டி செல்வகுமார். பின்னர் விஜய்க்கும் செய்தி தொடர்பாளர் ஆக பணியாற்றியவர் அவர் கதாநாயகனாக நடித்த புலி படத்தினை கேரளத்தை சேர்ந்த சிபுவுடன் இணைந்து தயாரித்தவர்.

 தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்டுப்பாட்டில் இருந்து ஒதுங்கிய விஜய் தந்தை நியமித்த அனைத்து ஊழியர்களையும் புறக்கணித்தார். அவர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் புஸ்லி ஆனந்த் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. விஜயுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட P.T. செல்வகுமார் “கலப்பை மக்கள் இயக்கம்” எனும் பெயரில் மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதிமய்யத்தின் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார்.
தமிழ்நாட்டு அரசியலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் விஜய்யுடன் தொடக்கம் முதல் நெருக்கமாக இருந்தவர், அவரது அந்தரங்கத்தை முழுமையாக தெரிந்தவர்களில் P.T செல்வகுமார் முதன்மையானவர் என்கிற அடிப்படையில் அவரது கலப்பை மக்கள் இயக்கத்தை கலைத்துவிட்டு திமுகவில் இணைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது திமுகவின் உறுப்பினராக இருக்கும் P.T.செல்வகுமார் விஜய்க்கு எதிராக அரசியல் விமர்சனங்களை பொதுவெளியில் செய்து வருகிறார். இந்த நிலையில் திமுகவின் தமிழ்நாடு மாநில வர்த்தக அணியின் துணை செயலாளராக திமுக தலைமை கழகம் நியமனம் செய்துள்ளது. இதனையொட்டி

அவரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு 16.02.2026 அன்று சென்னையில் நடைபெற்றது… இவ் விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர்   முரளி ராமநாராயணன், துணை தலைவர் தமிழ் குமரன், திரைப்பட தயாரிப்பாளர்கள்விடியல் ராஜு, ராஜா, அடிதடிமுருகன், சி வி குமார், விஷ்னு ஹாசன், பொன்னுரங்கம்
 நடிகர், ஏ எல் உதயா, நடிகர் விஜித், எம். எஸ். முருகராஜ், சாந்தி வனராஜன், பத்திரிகையாளர் துரை ராமச்சந்திரன் ஆகியோர் பி. டி. செல்வகுமார் அவர்களை பாராட்டி பேசினர்
நிகழ்வில் 10 ஏழைப் பெண்களுக்கு தொழில் செய்ய நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,நடிகர் விஜய்யின் உதவியாளர் செல்வம் என்பவருக்கு 50,000 ம் ரூபாய் நிதி உதவியும் படங்களில் பணிபுரிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தியும் கொடுத்திருக்கிறார். அதோடு
தமிழக அரசின் சிறந்த தயாரிப்பாளர் விருது பெற்ற தயாரிப்பாளர் சோழா கிரியேஷன்ஸ் பொன்னுரங்கம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது…

 

Comments (0)
Add Comment