திரைப்பட கல்லூரி மாணவர்கள் இயக்கத்தில்’ வயலெட் கனவு எம் 4

பிரபல கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில், திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’. எம் 4
அப்பு மூவிஸ் (Appu Movies) சார்பில் திருமதி.ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T, இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பி.நித்யானந்தன் B.A.D.F.T, இயக்குகிறார்.
’பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘அங்காரன்’ படத்தில் நாயகியாக நடித்த ரெய்னா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர்.அரவிந்தராஜ், ராம்நாத், கிரிஷ் ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஜெகன் கல்யாண் இசையமைக்கும் இப்படத்திற்கு கீதாகரண் B.V.A, ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எம்.சயீப் B.V.A, படத்தொகுப்பு செய்ய, ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாஸ்கர் ராஜ் வசனம் எழுதுகிறார். ஏ.எக்ஸ்.என்.பிரகாஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சவால் ராம் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அசோக் பணியாற்ற, ஒப்பனை கலைஞராக பிரேமா பணியாற்றுகிறார். நிர்வாக தயாரிப்பு கே.தங்கராஜ் பணியாற்ற, பி.ஆர்.ஓ-வாக தர்மதுரை & சுரேஷ்சுகு பணியாற்றுகிறார். துரை விநாயகமூர்த்தி கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இதுவரை திரையில் பார்த்திராத ஒரு கிரைம் திரில்லர் அனுபவத்தை கொடுக்கும் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரும் திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  படத்தை அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Comments (0)
Add Comment