தூக்கு துரை இயக்குநர் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன்

தூக்குதுரை படத்தை தொடர்ந்து இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த சினிமா பயணத்தை Untitled Production No.1 எனும் பெயரில் புதிய திரைப்படத்தை ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “Vyom Entertainments” நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில்  இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கிறார். அவருடன் பிரபல நடிகை குஷி ரவி,மற்றும்   நடிகர்கள் Y. G. மஹேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், சேலம் தீபக், ஹேமா, லிர்த்திகா மற்றும் என். ஜோதிகண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் தொடக்க விழாவுடன், படப்பிடிப்பு02.07.2025 அன்று சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.படத்தின்  தலைப்பு மற்றும் முதல் பார்வை உள்ளிட்ட மேலும் பல தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்என படக்குழு தெரிவித்துள்ளது.

 

Comments (0)
Add Comment