நவீன தொழில்நுட்பத்தில் “ஆட்டோகிராஃப்” வெளியாகிறது

 

சேரன், இயக்​கி, தயாரித்​து, கதை நாயகனாக நடித்த படம்க நடித்த படம் ‘ஆட்​டோகி​ராஃப்’. இதில் சினே​கா, கோபி​கா, மல்​லி​கா, கனிகா என பலர் நடித்​தனர்.

கடந்த 2004-ம் ஆண்டு வெளி​யான இந்​தப் படம் பள்​ளி, கல்​லூரி, இளமை பரு​வங்​களில் ஒரு​வர் சந்​திக்​கும் காதல் அனுபவங்​களை  பேசி​யது. 100 நாட்​களுக்கு மேல் ஓடிய இந்​தப் படத்​துக்கு மூன்று தேசிய விருதுகளும் கிடைத்​தது. ‘ஒவ்​வொரு பூக்​களு​மே’ பாடலை பாடிய சித்​ரா, எழு​திய பா.​விஜய், இசை அமைப்​பாளர் பரத்​வாஜ் ஆகியோ​ருக்கு விருது கிடைத்​தது.

இந்​தப் படம் 21 ஆண்​டு​களுக்​குப் பிறகு நவீன தொழில்​நுட்​பத்​துக்கு மாற்​றப்​பட்டு மே 16 ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆக இருப்​ப​தாக இயக்​குநர் சேரன் தெரி​வித்​திருந்​தார். இதற்​காக ஏ ஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட ட்ரெய்​லரும் வெளி​யிடப்​பட்​டது. பல்​வேறு காரணங்​களால் அப்​போது இப்​படம் வெளி​யாக​வில்​லை. இந்​நிலை​யில் நவ. 14 ஆம் தேதி வெளி​யாக இருக்​கிறது. 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடும் இந்​தப்​படத்​தின் 20 நிமிடக் காட்​சிகளை குறைத்​துள்​ளனர்.

Comments (0)
Add Comment