விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இதன் வெளியீட்டு தேதி பல முறைஅறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தற்போது ‘எல்.ஐ.கே’ படத்தின் வெளியீட்டு தேதியினை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
ஏப்ரல் 3 ஆம் தேதி ‘எல்.ஐ.கே’ வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதன் உடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் பணிபுரிந்துள்ளார்.
‘எல்.ஐ.கே’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்குமே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும் அதனால் வெளியீடு தாமதமாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவை சரி செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.