வன்முறை ஒவ்வொருவர் வாழ்விலும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் மலையாள படம் பல்டி.
தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கதாநாயகன் ஷேன்நிகமும் சாந்தனுவும் பஞ்சமி எனும் கபடிக்குழுவிற்கு தொடர் வெற்றியை பெற்று தருகிறார்கள். பொற்றாமரை எனும் அணியை செல்வராகவனும் ஷோ பாய்ஸ் டீம் எனும் அணியை அல்போன்ஸ் புத்திரன் நடத்துகின்றனர்.
அவர்கள் இருவரும் பஞ்சமி அணியில் இருக்கும் சாந்தனுவை தங்கள் அணிக்காக விளையாட அழைக்கிறார்கள்.இரு அணிகளில் ஓரணியில் விளையாட வேண்டும் என்கிற சூழலில் சாந்தனுவை ஆபத்து சூழ்கிறது.அதிலிருந்து அவரை மீட்க ஷேன்நிகம் களமிறங்குகிறார்.அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை ரத்தம் தெறிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் ஷேன்நிகம்,துடிப்பான விளையாட்டுவீரர் மற்றும் நண்பனுக்காகப் போராடும்
உணர்ச்சி மிகுந்த வீரராக நடித்திருக்கிறார்.
கதையோட்டத்துக்கான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் சாந்தனுவுக்கு இது பெயர் சொல்லும்வேடமாக அமைந்திருக்கிறது.
நாயகி பிரீத்தி அஸ்ரானிக்கு காட்சிகள் குறைவு என்றாலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இயக்குநர்கள்செல்வராகவன்,அல்போ
இருவருடைய தோற்றங்களும் ரசிக்கும்படி இருக்கின்றன.
அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவு கதையில் இருக்கும் பரபரப்பு காட்சிகளிலும் எதிரொலிக்கிறது.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் ரசித்துக் கேட்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், விளையாட்டில் வீரர்களாக இருக்கும் நண்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் தாதாக்கள் பிடியில் சிக்கி வன்முறைச் சூழலுக்கு இடம்மாறுகிறார்கள் என்பதை உணர்வுப் பூர்வமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார். அவருடைய கதைக்கு இதில் நடித்திருக்கும் நடிகர்கள் வலுச் சேர்த்திருக்கிறார்கள் என்பதால் அவர் எண்ணம் ஈடேறியிருக்கிறது.