அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மரகதமலை”. எல்.ஜி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளபடம்,
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 6.03.2026 அன்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
இயக்குநர் S.லதா பேசியதாவது…,
“மரகதமலை” படம் பழைய காலத்து ராஜா–ராணி கதைகள், மந்திரவாதிகள், மிருகங்கள் போன்ற அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி கதை ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் கடின உழைப்புடன் உருவாக்கியுள்ளோம்.
தடா ஃபால்ஸில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. ஹீரோ மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். டான்ஸ், ஃபைட் போன்ற காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்தார். ஹீரோயினும் தனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். ஜமீன்தார் மற்றும் அவரது மனைவியின் காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளன.
மேலும் ஜெகன், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடல் மற்றும் நடனக் காட்சியும் மிகவும் அழகாக உருவாகியுள்ளது. குழந்தைகளும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர் என்றார்..
மரகதமலைபடத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா, இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் மாஸ்டர் சஷான்ந்த் அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.
எல்.வி.முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.