பேட்டில்- திரைப்பட விமர்சனம்

அர்ஜூன் பிரபாகரன் கதை நாயகனாகவும் ஆராத்யா நாயகியாகவும் சுப்ரமணிய சிவா  எதிர்நாயகனாகவும் நடித்துள்ள பேட்டில் திரைப்படத்தை இயக்கியுள்ளார் நாராயணன் பழனி.
நாயகனுக்கு ராப் பாடகராக புகழடைய வேண்டும் என்ற வேட்கை அதிகம். அதை அடைந்தாரா என்பதும், அதனால் அவர் எதிர்கொண்ட விளைவுகளும்தான் படத்தின் ஒரு வரிக் கதை.
நாயகி ஆராத்யா பள்ளி ஆசிரியை. மாணவர்களிடம்நேசமுடன் இருக்கிறார். ராப் பாடகர் அர்ஜூனனை காதலிக்கிறார். இதற்கிடையே நாயகி பணிபுரியும் பள்ளியில் மன அழுத்தம் காரணமாக ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்கிறார்.
பள்ளியில் நடக்கும் மோசடியால் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றி கொதிக்கும் ஆராத்யா, இப்பிரச்னையை ராப் பாடலின் மூலம் கொண்டுவந்தால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று காதலனிடம் கேட்க என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.
இசையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் பாடல்களில் இன்னும் சுவை கூட்ட முயற்சி செய்திருக்கலாம்.  இசையமைப்பாளர் ஜீவா பின்னணி இசையில் ஈர்க்கிறார்.
முனிஸ்காந்த், சரவணசுப்பையா, ராஜலெட்சுமி என அவரவர் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ராப் இசை என்று சொல்லிவிட்டு, வழக்கமான ஆக்சன் காட்சிகளைக் கலந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. நடிப்பு, திரைக்கதையை அதிக கவனத்துடன் செய்திருந்தால் ரசனையான ஒரு திரைப்படமாக மாறியிருக்கும்.

 

Comments (0)
Add Comment