இந்துக்கள் வழிபடும்கடவுள்களில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார் என்பது கதை. அந்த பத்து அவதாரங்கள், பொதுவாக “தசாவதாரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவை: மச்சா அவதாரம், கூர்ம அவதாரம்,வராக அவதாரம் நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம்,கல்கி அவதாரம் என புராண கதைகளில்
இந்த பத்து அவதாரங்களும் மகா விஷ்ணுவால் பூமியில் வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டவை. ஒவ்வொரு அவதாரமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனும், தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் எடுக்கப்பட்டதாக இந்துக்களால் நம்பப்படுகிறது.
இவற்றில் நரசிம்ம அவதாரம்
கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தவன் பிரகலாதன். இரணியகசிபு, தான் பெற்ற சாகாவரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.
இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்று செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
பிரகலாதனைக் கொல்ல எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன், தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப்போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான்.
இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, அங்கிருந்து விஷ்ணு, நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளியதாக.
பல்லாண்டுகளாகச் சொல்லப்பட்டுவரும் இந்தக்கதைக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் படம்
திரைக்கேற்ற கதையை ஜெயபூர்ணதாஸ் எழுதியுள்ளார்.திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அஸ்வின்குமார்.சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
சிறுவர்களுக்கும் புரியும்படி கதையை எழுதியிருப்பதோடு, பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் திரையரங்க அனுபவத்தைக் கொடுத்து வியக்க வைத்திருக்கிறார்கள்.